கடற்படையின் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 13:32

கடற்படையின் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஆள்கடத்தல் சம்பவம் தொடர்பில் கடற்படையின் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியவழக்கு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வு பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் வசந்த கருணாகொடவின் வாக்கு மூலத்தை பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது சவேந்திர பெர்னாண்டோ சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆலோசனைகள் வழங்கியிருப்பதாகவும் இச்சம்பவம் தொடர்பில் உண்மைகளை மறைத்து முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை அவர் வழங்கியிருப்பதாகவும் இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் மேலும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். சவேந்திர பெர்னாண்டோவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் அளிக்குமாறு தெரிவித்திருந்த போதும் ஆனால் அவர் இதுவரை வருகை தரவில்லை. அதனால் அவ்வாறு வருகை தருவதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு குற்றப்புலான்வு திணைக்கள பிரிவினர் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 13:32

Default