போதைப்பொருள் நிவாரணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி போதைப்பொருள் நிவாரண செயலணியுடன் இணைந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தை தெளிவுபடுத்துவதே முதற்கட்ட நோக்காகும். போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அவர்களை தெளிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.