fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 13:41

இலங்கையுடனான தொடரில் சகீப் அல்ஹசனுக்கு ஓய்வு

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்களதேஷ் சகல துறை ஆட்டக்காரர் சகீப் அல் ஹசனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ம் திகதி பங்களதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது. தொடரில் பங்கேற்பதற்கென பங்களதேஷ் அணி இலங்கை வருகை தரவுள்ளது.

பங்களதேஷ் வீவர் லிட்டன் தாஷும் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார். மஷ்ரபி மொட்ரஷா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கை தொடருக்கான பங்களதேஷ் அணியில் மஷ்ரபி மோர்தசா, தமிம் இக்பால், சவுமியா சர்கர், அனாமுல் ஹக்யூ, முகமது மிதுன், முஷ்பிகுர் ரஹிம், மெஹ்முதுல்லா ரியாத், மொசாடெக் ஹொசைன், சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், தைஜூல் இஸ்லாம், ருபெல் ஹொசைன், முகமது ஷாய்புதின், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2019 13:41

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க