ருஹுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தின் மூன்று பீடங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்படி கடல்வள தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து முகாமைத்துவ பீடம் உள்ளிட்ட ஐந்து பீடங்கள் கடந்த 10ம் திகதியுடன் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ருஹுணு பல்கலை. வெல்லமடம வளாகத்தின் 3 பீடங்கள் இன்று மீண்டும் திறப்பு
படிக்க 0 நிமிடங்கள்