fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 13:39

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விசேட கூட்டமொன்றை நடாத்துகிறது. உலகக்கிண்ணத்தின் பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டுவெண்டி – 20 போட்டிகளை கொண்ட தொடருக்கெனவே இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கிறது.

எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டுவெண்டி – 20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான பயிற்சி போட்டியாக இதனை கருதுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதனால் சரியான இந்திய அணியை தேர்வுசெய்யும் முகமாக குறித்த கூட்டம் இடம்பெறுகிறது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் பின்னர் இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 13:39

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க