fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிரான ட்ரம்ப்பின் கருத்துக்கு கண்டனம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 12:47

அமெரிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிரான ட்ரம்ப்பின் கருத்துக்கு கண்டனம்

அமெரிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கண்டனம் வெளியிட்டுள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மிக மோசமான அரசாங்கங்களை கொண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும், அவர்கள் தமது சொந்த நாடுகளுக்கே திரும்பிச்செல்ல வேண்டுமெனவும் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியின் குறித்த கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாகவும் பெண்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இதேவேளை ட்ரம்பின் குறித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2019 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க