fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் முதல் தடவையாக மோட்டார் வாகனங்கள் அற்ற தினம்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2019 11:51

இலங்கையில் முதல் தடவையாக மோட்டார் வாகனங்கள் அற்ற தினம்..

கொழும்பு மாநகர சபை – நெதர்லாந்து தூதரகத்தின் அணுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்த மோட்டார் வாகனங்கள் (CAR FREE ZONE)அற்ற தினம் கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மற்றும் கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கையில் முதல் தடவையாக மோட்டார் வாகனங்கள் அற்ற தினம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். இதனால் நேற்று கொழும்பு சுதந்திர சதுக்க பகுதி மோட்டார் வாகனங்கள் அற்ற பிரதேசமாக காட்சியளித்ததுடன் பலரையும் கவர்ந்திருந்தது. இந்த பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்-யுவதிகள், முதியவர்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தினார்கள். யுனிசெவ், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம் உள்ளிட்ட பல அமைப்புகளின் காட்சி மற்றும் விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இதனால் கொழும்பு கறுவாத்தோட்டப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார், வீதிப் போக்கவரத்துப் பொலிஸார், வைத்திய முதலுதவிக் குழுவினரும் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2019 11:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க