fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2019 11:27

உலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து

வரலாற்றில் முதன்முறையாக கிரிக்கட் உலக கிண்ணத்தை இங்கிலாந்து அணி நேற்றைய தினம் கைப்பற்றியது. 12வது உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற நியுசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. ஹென்றி நிக்கலஸ் 55 ஓட்டங்களையும், டொம் லெதம் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் வோக்ஸ் மற்றும் பிளங்கட் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் 242 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்று போட்டியை சமப்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும், பட்லர் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பகர்சன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

போட்டி சமநிலையில் நிறைவடைந்ததால் வெற்றி அணியை தீர்மானிப்பதற்கென சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. குறித்த சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றது. 16 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணியும் விக்கெட் இழப்பின்றி 16 ஓட்டங்களை பெற்று சுப்பர் ஓவரை சமப்படுத்தியது. இதனையடுத்து பௌன்ட்ரிகளை அடிப்படையாக கொண்டு வெற்றி தீர்மானிக்கப்பட்டது. குறித்த விதியின் படி அதிக பௌன்ட்ரிகளை விளாசிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவானார். உலக கிண்ண தொடரொன்றில் அதிக ஓட்ட்களை குவித்த அணித்தலைவர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டிய நியுசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதுவரை இடம்பெற்ற 11 உலக கிண்ண கிரிக்கட் தொடர்களில் கிண்ணத்தை வெல்லாத இங்கிலாந்து அணி இம்முறை கிண்ணம் வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதேவேளை 13வது உலக கிண்ண கிரிக்கட் தொடர் 2023ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2019 11:27

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க