நுவரெலிய ஆதார பொது வைத்தியசாலை இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2019 09:48

நுவரெலிய ஆதார பொது வைத்தியசாலை இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார பொது வைத்தியசாலை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு நிகழ்வு ஆரம்பானது.

நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் குறித்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கட்டில்களைக் கொண்ட வாட் கட்டிடத்தொகுதி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என அனைத்து வசதிகளையும் கொண்டதாக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளுக்கென 7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யு.ஆர்.எம்.மஹேந்த்ர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2019 09:48

Default