fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிண்ணம் வெல்லும் எண்ணத்துடன் இங்கிலாந்து – நியுசிலாந்து பலப்பரீட்சை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2019 14:54

கிண்ணம் வெல்லும் எண்ணத்துடன் இங்கிலாந்து – நியுசிலாந்து பலப்பரீட்சை

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் கிண்ணத்தை வெல்லும் எண்ணத்துடன் களமிறங்கவுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க லண்டன் லோட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது.

உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டி லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 4வது சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. போட்டிகளை நடத்தும் நாடான இங்கிலாந்து அணி இயன் மோர்கன் தலைமையில் களமிறங்கவுள்ளது. நியுசிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கும். இரு அணிகளும் சமபலம் கொண்டவையாக காணப்படுகின்றன. இதனால் போட்டி இறுதிவரை பரபரப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை உலக கிண்ணத்தை கைப்பற்றவில்லை. இந்நிலையில் உலக கிண்ணத்தை தனதாக்க இரு அணிகளும் பல்வேறு வியூகங்களுடன் களமிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. லோட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமையுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி கூடுதல் ஓட்ட எண்ணிக்கையை உடைய போட்டியாக அமையுமென கிரிக்கட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை இன்றைய போட்டியின் நடுவர்களாக குமார் தர்மசேனவும் மராயிஸ் எரஸ்மஸ்சும் செயற்படவுள்ளனர். 3வது நடுவராக ரொட் டக்கர் பெயரிடப்பட்டுள்ளார். மேலதிக நடுவராக அலிம் தார் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை போட்டி மத்தியஸ்தராக ரன்ஜன் மடுகல்லே செயற்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2019 14:54

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க