போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் ஒன்பது பேரையும் தடுத்து வைத்து விசாரிக்க பொலிசாருக்கு அனுமதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 20:15

போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் ஒன்பது பேரையும் தடுத்து வைத்து விசாரிக்க பொலிசாருக்கு அனுமதி

காலி துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் 60 கிலோ கிராம் போதை பொருளுடன் வெளிநாட்டு படகொன்றில் இருந்து ஈரானிய பிரஜைகள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிசார் நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை நீதவான் வழங்கியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 20:15

Default