fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது : சாகல

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 19:54

அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது : சாகல

அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொடிகாரகொடைவில் இருந்து நம்பிகந்த ஊடாக மொரவக்க வரையான வீதியை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் அமைச்சரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதற்கென சுமார் ஆறு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர் கருத்து தெரிவிக்கையில்,

“2018ம் ஆண்டில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. நாம் அதனை தோற்கடித்தோம். அதன் பின்னர் ஒக்டோபர் 26ம் திகதி திடீர் ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. இரண்டு மாதங்கள் அரசாங்கம் ஒன்று இருக்கவில்லை. நாம் நீதிமன்றத்தை சுயாதீனமாக்கியதனால், அரச சேவை, பொலிஸ் சேவை என்பன சுயாதீனமாக்கப்பட்டிருந்தமையினால் எமக்கு நியாயம் கிடைத்தது. உரிய அரசாங்கத்துக்கு நிர்வகிக்குமாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. துரித அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் மற்றொரு நம்பிக்கையில்லா பிரேரணை அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டது. அதனையும் தோற்கடித்தோம். உங்களுக்குரியவற்றை நாம் உங்களுக்கு கையளிப்போம். எங்களை கால்களால் இழுக்க எவராலும் முடியாது. தேர்தலை நோக்காக கொண்டு நாம் பணி செய்வது இல்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்தவொரு எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.”

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 19:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo