fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டி : இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நாளை பலபரீட்சை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 19:48

உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டி : இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நாளை பலபரீட்சை

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை நடைபெறவுள்ளது.இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் இறுதி போட்டி இந்நாட்டு நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை உலக கிண்ணத்தை கைப்பற்றவில்லை. நியூசிலாந்து முதற்தடவையாக உலக கிண்ண இறுதி போட்டிக்கு 2015ம் ஆண்டில் தகைமை பெற்றிருந்தது. இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு சுமார் 27 வருடங்களுக்கு பின்னரே இம்முறை தகைமை பெற்றமை விசேட அம்சமாகும். இதற்கு முன்னர் 1979, 1987 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளிலேயே இறுதி போட்டிக்கு தகைமை பெற்றிருந்தது. இம்முறை உலக கிண்ண மாபெரும் இறுதி போட்டியின் நடுவர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த குமார் தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். போட்டி மத்தியஸ்தராக ரஞ்சன் மடுகல்ல நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2019 19:48

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க