fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்னல் தாக்கியதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 15:36

மின்னல் தாக்கியதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

கனடாவிலிருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் மீது மின்னல் தாக்கியதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் கனடா 33 ரக விமானம் 269 பயணிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன், நள்ளிரவு 12.33 மணிக்கு வான்கூவரில் இருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்டுள்ளது. ஹொனலுலுவிலிருந்து தென்மேற்கே 600 மைல் தொலைவில் 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து வேகமாக திருப்பப்பட்ட விமானம், அமெரிக்காவின் ஹவாயில் அதிகாலை 6.45 மணியளவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் 35 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க