பாதையில் தடுமாறிய போதை சாரதிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
Related Articles
கடந்த 6 நாட்கள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 2 ஆயிரத்து 280 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதிக்குள் 243 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5ம் திகதி ஆரம்பமானது. ஒருமாத காலம் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பதிவாகும் அதிகளவான விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே காரணமாக அமைந்துள்ளது. இதனால் விபத்துக்களை குறைப்பதற்காக பொலிஸார் ஒருமாத கால நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.