fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 08:14

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. 27 ஆண்டுகளின் பின்னர் இங்கிலாந்து அணி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி குறித்த சந்தர்ப்பத்தை தனதாக்கியது. போட்டி பேர்மிங்ஹேமில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது.

ஸ்டீவன் ஸ்மித் 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆடில் ரஷீட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு 224 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஜேசன் ரோய் 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை இங்கிலாந்து அணி உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்தாடவுள்ளது. போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் இதுவரை உலகக்கிண்ணத்தை கைப்பற்றவில்லை. இதனால் முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான போட்டி உச்சக்கட்ட விறுவிறுப்பை வெளிப்படுத்துமென கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 08:14

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க