எழுச்சிபெறும் கிராமிய குளங்கள் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 15:02

எழுச்சிபெறும் கிராமிய குளங்கள் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுச்சிபெறும் கிராமிய குளங்கள் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். 7 மாவட்டங்களில் விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்தும் நோக்கில் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் பொதுமக்கள் திட்டத்தின் நன்மையை பெற்றுக்கொள்வர். பசுமை காலநிலை நிதியத்தின் 3 ஆயிரத்து 682 மில்லியன் ரூபா நிதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஆயிரத்து 250 மில்லியன் ரூபா செலவில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், வவுனியா, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள கிராமிய குளங்கள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2019 15:02

Default