fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வலைகுடாவில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2019 12:58

வலைகுடாவில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர்

ஈரானிய படகுகள் பிரிட்டிஷ் எண்ணெய் தாங்கிய கப்பலை வழிமறித்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமது கப்பலை வழிமறித்தமையானது சர்வதேச சமுத்திர விதிமுறைகளை மீறும் ஒரு செயல் என பிரிட்டிஷ் அரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரானிய புரட்சிகர படகுகளே இவ்வாறு பிரிட்டிஷ் கப்பலை வழிமறித்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறும் வகையில் ஈரானிய எண்ணெய் தாங்கியொன்று பிரிட்டிஷ் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பிரிட்டிஷ் கப்பல் இவ்வாறு வழிமறிக்கப்பட்டுள்ளது. தமது கப்பல் விடுவிக்கப்படாவிட்டால் பிரிட்டிஷ் எண்ணெய் தாங்கிய கப்பல் கைப்பற்றப்படுமென ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2019 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க