அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் கிம் டரோச் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சித்த விவகாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அண்மையில் டொனால்ட் ட்ரம்பையும் அவரது அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து கிம் டரோச் பிரித்தானிய அரசுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். குறித்த கடிதம் கசிந்துள்ள நிலையில் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்குமிடையில் பரபரப்பான சூழல் உருவானது. குறித்த விமர்சனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பதிலடி கொடுத்திருந்தார்.
எனினும் அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவரின் குறித்த விமர்சனத்தால் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.