fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையே தாம் சுற்றுலா செல்வதற்கு விரும்பும் நாடு என பிரபல் ஹொலிவுட் நடிகை தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2019 10:28

இலங்கையே தாம் சுற்றுலா செல்வதற்கு விரும்பும் நாடு என பிரபல் ஹொலிவுட் நடிகை தெரிவிப்பு

தனது வாழ்நாளில் ஒரு போதும் விஜயம் செய்யாத ஒரு நாடு ஆனால் தான் செல்வதற்கு விரும்பும் நாடு இலங்கை என உலக புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகை தெரிவித்துள்ளார். மாகோ ரொபி எனப்படும் குறித்த நடிகை அமெரிக்காவின் பிரபல வோர்க் சஞ்சிகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செவன்டி திரி கொஸ்டியன்ஸ் அதாவது 73 கேள்விகள் கேட்கப்படும் இந்நிகழ்ச்சியில் அவரிடம் நீங்கள் ஒரு போதும் செல்லாத நாடு ஆனால் செல்ல விரும்பும் நாடு எதுவென கேட்கப்பட்டது. அதற்கு அவர் தான் செல்ல விரும்பும் நாடு இலங்கையே என பதிலளித்துள்ளார். ஹொலிவுட் நடிகை மாகோ ரொபி 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் சஞ்சிகையால் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2019 10:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க