fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உட்சவத்தின் 7 வது நாள் இன்றாகும்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2019 14:44

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உட்சவத்தின் 7 வது நாள் இன்றாகும்

கதிர்காம கந்தன் ஆலய உட்சவம் வசந்தம் மற்றும் ஐரிஎன் ஊடக வலையமைப்பின் ஊடாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. வருடாந்த ஆடிவேல் உட்சவம் எதிர்வரும் 17 ம் திகதி வரை தொடர்ச்சியாக 14 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாள் இரவும் பெரஹர வீதி ஊர்வலம் இடம்பெறவுள்ளது. இறுதி ரந்தோலி பெரஹரா இம்மாதம் 16 ஆம் திகதி வீதி உலா வரவுள்ளது. இப்பெரஹர பாரம்பரிய கலை கலாசார அம்சங்களை உள்ளடக்கியதாக இடம்பெறும். எதிர்வரும் 17 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் வரலாற்று சிறப்புமிக்க விழா நிறைவுபெறவுள்ளது.

இன்றைய 7 ஆம் நாள் நிகழ்வான கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் தேவஸ்தானத்தின் கொடியேற்ற நிகழ்வு இடம்பெறுகின்றது. அதனை தொடர்ந்து சிவன் கோவிலிலும் பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இம்மகோற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளனர். இனமத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்று கூடுகின்ற தலமாக இத்தலம் அமைகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2019 14:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க