ஐரோப்பிய சங்கம், ஈரானிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. யுரேனியத்தை பயன்படுத்தும் தீர்மானத்தை மீள் பரிசீலிக்குமாறு ஈரானிடம் ஐரோப்பிய சங்கம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு மேலதிகமாக யுரேனியத்தை பயன்படுத்த ஈரான் தீர்மானித்துள்ளது. இது பிரச்சினைக்குரிய நிலவரமென ஐரோப்பிய சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
ஈரான் அணுவாயுத உற்பத்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய சங்கம் தெரிவிக்கிறது. எவ்வாறெனினும் ஐரோப்பிய சங்கம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஈரான் குற்றம் சுமத்துகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய ஐரோப்பிய சங்கமும் அமெரிக்காவும் செயற்படவில்லையென ஈரான் சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் குறித்த ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை செயற்படுத்த ஈரான், ஐரோப்பிய சங்கத்திற்கு இரண்டு மாதகால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.