காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓகஸ்ட் 8ம் திகதி
Related Articles
லிற்றோ கேஸ் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்படுமென மூன்று நீதிபதிகள் இடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. லிற்றோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவினை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2017ம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இம்முறைகேடு இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் குறித்த மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் ச்சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கமைய இதுதொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி அறிவிக்கவுள்ளதாக மூன்று நீதிபதிகள் அடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.