மன்னார் மணல் அகழ்வு வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்ட கல்லாறு பாலத்தை அண்மித்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்கென இராணுவத்தினர் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மரக்கன்று நடும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக குறித்த வனப்பகுதியில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சுற்று சூழலின் சமநிலையைப் பேணும் வகையிலான மரக்கன்றுகள் இவ்வாறு நடப்பட்டுள்ளன.
குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் வில்பத்து வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 45 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.