நாட்டில் தற்போது காணப்படும் வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது மாற்றம் ஏற்படுமென வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.