உலக கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அவ்வணியில் இடது கை துடுப்பாட்டகாரரான ஷான் மார்ஷ் இடம்பிடித்திருந்தார். அவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கம்மின்ஸ் வீசிய பந்தில் அவரது கை காயமடைந்துள்ளது. பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அவரது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவ்விடத்திற்கு பீட்டர் ஹென்ஸ்கொம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.