fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மரணதண்டனை தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 17ம் திகதி..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 13:11

மரணதண்டனை தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 17ம் திகதி..

மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 17ம் திகதி அறிவிக்கப்படுமென ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

மரணதண்டனை தீர்மானத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு ரீட் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இடைக்கால தடை விதிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 17ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. குறித்த ரீட் மனு தொடர்பில் விசாரணை செய்யும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் இன்று இவ்வுத்தரவை பிறப்பித்தது.

இதேவேளை குறித்த ரீட் மனு மீதான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுப்பதா என்பது குறித்தான அறிவிப்பும் எதிர்வரும் 17ம் திகதி வெளியிடப்படுமென நீதிமன்றம் அறிவித்தது. இதில் பிரதிவாதிகளாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க