மட்டக்களப்பு சம்பவம் குறித்து நால்வர் கைது : மேலதிக விசாரணைகள் ஆரம்பம்
Related Articles
மட்டக்களப்பு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிசார் மீது தாக்குதல் நடாத்தி ரிவோல்வரையும் ரவைகளையும் எடுத்துச்செல்வதற்கும் கடமைக்கு தடை ஏற்படுத்தி சம்பவம் குறித்து 4 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். நேற்றிரவு மட்டக்களப்பு பொலிசாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ஏனைய சந்தேக நபர்களும் கடத்திச்செல்லப்பட்ட துப்பாக்கியையும் தேடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.