fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 12:05

இந்திய புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில்

இந்தியப்பிரதமர் நரேந்திர மோதியின் 2 ம் கட்ட பதவிக்காலத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்ற மக்கள் அவையின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்தார்.

2019ம் ஆண்டுக்கான அந்நாட்டின் பொருளாதார ஆய்வு அறிக்கையும் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2025 ம் ஆண்டளவில் 5 ரில்லியன் அமெரிக்க டொலர் பொருளார வளர்ச்சியை அடைவதற்கும் மக்களுக்கு வரி நிவாரணங்களை வழங்குவதற்கும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் மத்திய அளவிலாள வர்த்தகங்களுக்கும் தனிநபர் வர்த்தகங்களுக்கும் வரி நிவாரணங்கள் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தொழில் வாய்ப்புக்களையும் ஏற்றுமதி துறையையும மேம்படுத்துவதற்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதார ஆலோசகரான கிருஷ்ண மூர்த்தி சுப்பரமணியம் தயாரிக்கின்ற 2019 பொருளாதார ஆய்வின் மூலம் அரசாங்கத்தின் மொத்த தேசிய உற்பத்தியானது 2019, 2020 நிதி ஆண்டுகளில் 7 சதவீதத்தினால் அதிகரிக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இந்தியாவின் எதிர்காலப் பயணத்திற்கு டிஜிட்டல் மயமானது இன்றியமையாததென தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2019 12:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க