ஊலக கிண்ண கிரிக்கட்டில் 42வது லீக் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இதுவரை ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விளையாடிய 08 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
கடந்த உலக கிண்ண தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியிருந்தது.
இதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு போட்டிகளில் பங்கு பற்றி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றியீட்டி 3 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பில் அவ்வணி இரசிகர்கள் காத்திருகின்றனர்.
இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.