ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 13:07

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் நிலந்த பெர்ணான்டோ ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்த ஊழியர் ஒருவருக்கு எதிராக பொதுமுகாமையாளர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளார். அதை தடுக்கும் நோக்கில் சில தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். இதேவேளை ரயில் வேலைநிறுத்தத்தையடுத்து 400க்கும் மேற்பட்ட மேலதிக பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேவை ஏற்படின் மேலும் பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து சபையின் பிரதிபொதுமுகாமையாளர் ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 13:07

Default