fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க சுதந்திர தினம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 13:11

அமெரிக்க சுதந்திர தினம் இன்று

அத்திலாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் 13 குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. 1770-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சிக்கு காரணமாக அமைந்தது. இப்போர் 1775ம் ஆண்டு முதல் 1781ம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன் 14 1775ல் பிலடெல்பியாவில் கூடிய கண்டங்களுக்கான மாநாடு ஜோர்ஜ் வொஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான இராணுவத்தை அமைத்தது. அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் குறிப்பிட்ட அந்நியப்படுத்த முடியாத உரிமைகள் அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்ற பிரகடனத்துடன் இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது. 1776ம் ஆண்டு ஜூலை 4ம் திகதி இந்த பிரகடன வரைவு தோமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த திகதியில் தான் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியல் அமைப்பு 1788ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.

புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் சபை மற்றும் ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டன் 1789ம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர். தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஐக்கிய கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் சட்டமூலம் 1791ம் ஆண்டில் நிறைவேறியது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo