செம் என்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கூர்கா’ இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நகைச்சுவை, எக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியாக தயாராகி உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்படம் எதிர்வரும் 12ம் திகதி திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.