fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தை தொடர்ந்து நஷ்டயீடு வழங்க முன்வந்த போயிங் : மறுத்த மக்கள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 12:45

விபத்தை தொடர்ந்து நஷ்டயீடு வழங்க முன்வந்த போயிங் : மறுத்த மக்கள்

இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்குவதாக போயிங் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் தயாரித்த 737 மெக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கி 346 பேர் உயிரிழந்தனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு வழங்கப்படுமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த இழப்பீட்டு தொகையை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மெக்ஸ் ரக விமானங்களின் இயக்கம் உலகளாவிய ரீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க