மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியரின் பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித் துறை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கற்பிக்கும் 46 வயதுடைய ஆசிரியர் மாணவியை கழிவறைக்குள் வைத்து பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக பொலிசார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். சம்பவம் கடந்த மே மாதம் 27 ம் திகதி பதிவாகியது. மாணவியின் வாக்குமூலத்திற்கு அமைய ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். அவர் நேற்றைய தினம் வரை இரு தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சட்ட மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட சான்றிதழில் சிறுமி பாலியன் வன்புறுத்தலுக்கு உட்பட்டமைக்கான சான்றுகள் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு அவர்சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். எனினும் பொலிசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பொலிசாரின் விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாதென பருத்திதுறை நீதவான் நளினி சுதாகரன் பிணைக்கோரிக்கையை நிராகரித்தார்.