fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் அணிக்கு வந்த சோக கதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 12:37

பாகிஸ்தான் அணிக்கு வந்த சோக கதி

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் லீக் சுற்று ஆட்டம் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. அரையிறுதிக்கு இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்;த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் 4-வது இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன. இதில், நியூசிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை நாளை சந்திக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 11 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து அணி ஏற்கனவே 11 புள்ளிகளுடன் இருப்பதால் இரு அணிகளும் சம நிலையில் இருக்கும். இதனால் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு செல்லும்.
நியூசிலாந்து அணி ரன் ரேட்டில் (0.175) என்ற நிலையிலும் பாகிஸ்தான் அணி (-0.792) நிலையில் உள்ளமையினால் அரையிறுதிக்கான வாய்ப்பு அதிகமாக நியூசிலாந்து அணிக்கே உள்ளது. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழைய வேண்டும் என்றால் பங்களாதேஷ் அணியை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற வேண்டும்.
அதாவது பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 400 ஓட்டங்களை பெற்றால் பங்களாதேஷை 316 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். 350 ஓட்டங்களை குவித்தால் 38 ஓட்டங்களில் சுருட்ட வேண்டும். பாகிஸ்தான் அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடினாலும் இதற்கான வாய்ப்பு அரிது. இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெறுவது உறுதியென கிரிக்கட் விமர்சகர்களினால் கணிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 12:37

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க