fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் அபிமானமிக்க வரலாற்றை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலமே நாட்டின் மீது அன்புகொண்ட பரம்பரையை உருவாக்க முடியும் : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 12:16

நாட்டின் அபிமானமிக்க வரலாற்றை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலமே நாட்டின் மீது அன்புகொண்ட பரம்பரையை உருவாக்க முடியும் : ஜனாதிபதி

நாட்டின் அபிமானமிக்க வரலாற்றை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலமே நாட்டின் மீது அன்புகொண்ட பரம்பரையை உருவாக்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கும் பணியின் போது எமது நாட்டின் அபிமானம் வரலாற்றுக் கதைகள் மற்றும் அனுபவங்களும் கற்றுக்கொடுக்கப்படவேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவையில் அமைக்கப்பட்டுள்ள புராதன தொழிநுட்ப அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கல்வி மற்றும் அறிவுசார் போட்டியில் வெற்றிபெறுவதுடன் வாழ்க்கையின் சவாலும் வெற்றிகொள்ளப்படவேண்டும்.

பரீட்சையில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிபெறும் தத்துவங்கள் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். ஒவ்வொரு அம்மாவும் தனது மகனை மன்னராக்கவே விரும்புவார். அதன் அர்த்தம் முடிசூடுவது அல்ல. தனது பிள்ளையை சமூகத்தின் முன்னுதாரண புருஷராக உருவாக்குவதே ஒவ்வொரு பெற்றோரின் கடமையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2019 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க