பேச்சுவார்த்தைக்கு இணங்கினாலும் விரோதத்தோடே அமெரிக்கா உள்ளது : வடகொரியா குற்றச்சாட்டு
Related Articles
அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் இணங்கினாலும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாவகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருநாட்டு தலைவர்களும் அண்மையில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்த சில நாட்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார். இச்சந்திப்பு ஒருமணிநேரம் நீடித்தது. ஆனால் தற்போது வடகொரியா வெளியிட்டள்ள இந்த அறிக்கை இரு நாடுகளுக்கிடையிலான உறவை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.