பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஜூலை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 16:30

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஜூலை ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஜூலை 5 ஆம் திகதி ஆரம்பமாகவுளளது.
இவ்விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவிகரிக்கப்பட மாட்டாதெனவும் பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளை கொண்டே விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 3 மாதங்களுக்குள் இதன் பணிகளை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தின் மூலும் சிவில் விமான சேவைகளும் இடம்பெறுமென அண்மையில் சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது இலங்கையில் 15 விமான நிலையங்கள் காணப்படுகின்றன. இதில் 2 சர்வதேச விமான நிலையங்களாகும்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக 20 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் 5 கிலோ மீட்டர் நீளமான ஓதை பாதையை 10 பில்லியன் ரூபா செலவிலும் 3.1 கிலோ மீட்டர் நீளமான ஓடுபாதையை 20 பில்லியன் ரூபா செலவில் அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பலாலி விமான நிலையத்தில் பெரிய விமான நிலையங்களை தரையிறக்க 3.1 கிலோ மீட்டர் நீளமான ஓடுபாதை தேவை. வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்;குவதற்கு நெவிக்கேசன் விளக்குகள் பொருத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழு பலாலி விமான நிலையத்திற்கு சென்று அதன் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக ஆராய்ந்தது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 16:30

Default