அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் ப்ளாக் ஸ்கிம்மர் பறவையொன்று தனது குஞ்சுக்கு சிகரட் பட்ஸை உணவாக கொடுக்கும் புகைப்படம் ஒன்று உலகளாவிய ரீதியில் வைரலாகி வருகிறது. சிகரட் பஞ்சுகளை உணவென்று தவறாக பறவைகள் எண்ணி தனது குஞ்சுகளுக்கு அளிக்கின்றன.
புகைப்பட கலைஞர் கரென் மேசன் எடுத்த இந்த புகைப்படத்தை தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளதுடன், நீங்கள் புகைக்கிறீர்கள் என்றால், பட்ஸை கீழேபோட்டுவிட்டு செல்லாதீர்கள் என்றும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உண்மையில் எவ்வுயிரும் தம்முயிர் போல் காக்க வேண்டுமென்றே நாம் அனைவரும் கற்றறிந்துள்ளோம். இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு வாழ்வுண்டு. மனித இனம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் அவற்றின் வாழ்வை அழிக்கின்றது. இதிலிருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய உண்டு. சிகரட் மனிதை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல, அதையும் பொருட்படுத்தாமல் புகைத்து கொண்டுள்ள மனிதன், அவனை சூழவுள்ள உயிரினங்களையும் அழித்து கொண்டு தான் உள்ளான்.
இந்நிலையில் கடந்த 39 வருடங்களில்; கடற்கரைகளிலிருந்து மட்டும் 60 மில்லியன் சிகரட் பட்ஸ்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
