மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென நாடளாவிய ரீதியில் விஷேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு குறித்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பு மற்றும் நெரிசல் மிக்க நகரப் பகுதிகளில் குறித்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.