fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் : வளிமண்டலவியல் திணைக்களம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 12:04

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் : வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் இன்று சீரான காலநிலை நிலவுவதுடன், சப்ரகமுக மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடிய சாத்தியகூருகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2019 12:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க