fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

39வது லீக்கில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2019 11:07

39வது லீக்கில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண தொடரின் 39-வது லீக் போட்டி செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் கருணாரட்ன மற்றும், குஷால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கருணாரட்ன 32 ஓட்டங்களையும் பெரேரா 64 ஓட்டங்களை பெற்று அணிக்கு சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய அவிஷ்க பெர்ணான்டேத சிறப்பாக துடுப்பெடுத்தாடி 103 பந்தில் 104 ஓட்டங்களை எடுத்து சதம் பெற்றார். திரிமான ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 45 ஓட்டங்களை விளாச இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை குவித்தது. குஷால் மென்டிஸ் 39 ஓட்டங்களையும், மெத்திவ்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 339 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், சுனில் அம்பரீஷ்சும் விளையாடினார். அம்பரீஷ் 5 ஓட்டங்களிலும் கெயில் 35 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ஹோப் 5 ஓட்டங்களிலும் ஹெட்மெயர் 29 ஓட்டங்களிலும் விக்கட்டை பறி கொடுத்தனர். பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரானும், எலனும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். எலன் 51 ஓட்டங்ஙகளை பெற்றிருந்த போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். பூரன் 118 ஓட்டங்களை பெற்றிருந்த போது சதம் கடந்து ஆட்டமிழந்தார். இறுதியில் அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது. இதனால் இலங்கை அணி 23 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியு தனதாக்கியது.
இதேவேளை உலக கிண்ண தொடரின் 40வது லீக் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி பங்களாதேஷை எதிர்தாடுகின்றது. இப்போட்டி பேர்மிங்ஹாம் மைதானத்தில் இலங்கை நேரடிப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2019 11:07

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo