fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசியல் தலையீடுகள் இன்றி நீதி துறை சுயாதீனமாக செயற்படுகின்றது : தலத்தா தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 20:24

அரசியல் தலையீடுகள் இன்றி நீதி துறை சுயாதீனமாக செயற்படுகின்றது : தலத்தா தெரிவிப்பு

தற்போதைய அரசியல் தலையீடுகள் இன்றி நீதி துறை சுயாதீனமாக செயற்படுவதாக அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். இரத்தினபுரிய எலிபாத்த பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சமூர்த்தி உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 6 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி உரிமை பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 1205 குடும்பங்களுக்கு உரிமை பத்திரங்கள் வழங்கப்பட்டன. அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த அவரின் கருத்து “அன்று நீதித்துறையின் நிலைமை உங்களுக்கு தெரியும். இன்று அந்த நிலைமையில்லை. நீதியரசர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். இன்று அந்த நிலையில்லை. நீதித்துறை சுதந்திரமாக காணப்படுகின்றது. இன்று நீதியரசர்களுக்கும் ஒன்று, எனக்கும் ஒன்று, கிராமத்தில் உள்ள உங்களுக்கும் ஒரே நீதி. எவரதும் அரசியல் அதிகாரம் அவசியம் இல்லை. பொலிசாரின் கடமைகளுக்கு எவரும் தலையிட முடியாது. அரசாங்க ஊழியர்களுக்கு தேவையான சுதந்திரத்தை நாம் வழங்கியுள்ளோம். பொலிசாருக்கு கடமையை நிறைவேற்ற அவகாசம் வழங்கியுள்ளோம். நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம். சரியானதை சரியான முறையில் செய்ய சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்”

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 20:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க