fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய விபத்து நிவாரண வாரம் இன்று முதல்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 12:36

தேசிய விபத்து நிவாரண வாரம் இன்று முதல்

தேசிய விபத்து நிவாரண வாரம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களை குறைத்தல் மற்றும் அதுதொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டில் 15 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்களின் உயிரிழப்பிற்கு வீதி விபத்துக்களே பெரும்பான்மை காரணமாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதி விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளினால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்துடன் தொடர்புடைய சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தண்டப்பணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய விபத்து நிவாரண வாரத்தில் சாரதிகள் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2019 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க