தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து

தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து 0

🕔10:50, 3.ஜூன் 2019

தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து சம்பவமொன்று ஏற்ப்பட்டுள்ளது. பேங்கொக்கின் புகழ்ப்பெற்ற ச்சட்டுச்சக் சந்தைப் பகுதியில் தீ பரவியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். தீயினால் 10 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்து நேரடிப்படி நேற்றிரவு 9 மணியளவில் பரவியுள்ளது. இந்நிலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
டாக்டர் சாபி தொடர்பான விசாரணை அறிக்கை இன்று

டாக்டர் சாபி தொடர்பான விசாரணை அறிக்கை இன்று 0

🕔10:49, 3.ஜூன் 2019

குருநாகல் வைததியசாலை டொக்டரான சாபி ஷிகாப்தின் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று ஒப்படைக்கப்படவுள்ளது. குறித்த வைத்தியரினால் சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தமக்கு குழந்தைகள் பிறக்கவில்லையென கிடைத்த புகார்களை தொடர்ந்து சுகாதார அமைச்சின் செயலாளரினால் இக்குழு நியமிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இக்குழுவின் இடைக்கால அறிக்கை செயலாளரிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது.

Read Full Article
பங்களாதேஷ் அணி விசேட வெற்றியை பதிவு செய்த

பங்களாதேஷ் அணி விசேட வெற்றியை பதிவு செய்த 0

🕔10:47, 3.ஜூன் 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் லண்டனில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி விசேட வெற்றியை பதிவு செய்தது. தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றது. 331 ஓட்டங்கள் என்ற வெற்றிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா

Read Full Article
நாட்டிற்கான ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிகழ்வுகள் இன்று

நாட்டிற்கான ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிகழ்வுகள் இன்று 0

🕔10:42, 3.ஜூன் 2019

நாட்டிற்கான ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை வரை குறித்த நிகழ்வுகள் இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
காற்றுடன் கூடிய மழை கொண்ட வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம்

காற்றுடன் கூடிய மழை கொண்ட வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔10:42, 3.ஜூன் 2019

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் நிலவும் காற்றுடன் கூடிய மழை கொண்ட வானிலை மேலும் வலுவடையுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மணித்தியாலயத்திற்கு 40 கிலோ மீற்றர் அதிகரித்த வேகத்தில் ஓரளவு காற்றுவீசுமெனவும் வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
6 இலட்சம் பயனாளர்களுக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

6 இலட்சம் பயனாளர்களுக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று 0

🕔10:40, 3.ஜூன் 2019

6 இலட்சம் பயனாளர்களுக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று இடம்பெறுகிறது. கேகாலை ருவன்வெல்ல பகுதியில் நிகழ்வு இடம்பெறுவதுடன் இதில் 4 ஆயிரத்து 500 பேருக்கு புதிதாக சமுர்த்தி உரிமம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
பொசன் பண்டிகையை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை

பொசன் பண்டிகையை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை 0

🕔10:38, 3.ஜூன் 2019

பொசன் பண்டிகையை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்த சாசன அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சு உட்பட அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொசன் பண்டிகைளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அனைத்து மத நிகழ்வுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதமர் அறிவித்துள்ளார். அத்துடன் அன்னதான நிகழ்வுகள், அலங்காரங்கள் உள்ளிட்ட பொசன்

Read Full Article
197வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு

197வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு 0

🕔10:35, 3.ஜூன் 2019

197வது மாதிரிக் கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறும் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை செமட்ட செவண மாதிரிக்கிராமங்கள் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதற்கமைய சூரியவௌ – வெதிவௌ பகுதியில் 197வது மாதிரிக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை மறுதினம்

Read Full Article
அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔10:24, 3.ஜூன் 2019

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெள்ளை சம்பாவின் உயர்ந்தபட்ச சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 85 ரூபா என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ 80

Read Full Article

Default