தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் 3ம் நாளான இன்று ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வுகள்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் 3ம் நாளான இன்று ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வுகள் 0

🕔11:46, 26.ஜூன் 2019

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் 3ம் நாளான இன்று கொலன்னாவ ரஜமகா விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. போதைப்பொருள் ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக முப்படைகள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட சகல சமூக பிரிவினரையும் உள்ளடக்கிய போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அறிவூட்டல் நடைபவனியொன்றும் இன்று இடம்பெறவுள்ளது.

Read Full Article
துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது 0

🕔11:43, 26.ஜூன் 2019

இமதுவ ஹவுபே பிரதேசத்தில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை வலய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கல்கடஸ் வகை துப்பாக்கியொன்றும், துப்பாக்கியின் பாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர் இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவரென தெரியவந்துள்ளது.

Read Full Article
தெரிவுக்குழு முன்னிலையில் இன்று இராணுவ தளபதி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

தெரிவுக்குழு முன்னிலையில் இன்று இராணுவ தளபதி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 0

🕔11:37, 26.ஜூன் 2019

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது. இன்றையதினம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிற்பகல் 3 மணிக்கு குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

Read Full Article
நாளை 24 மணித்தியால நீர்வெட்டு

நாளை 24 மணித்தியால நீர்வெட்டு 0

🕔11:35, 26.ஜூன் 2019

கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணிமுதல் நாளை மறுதினம் காலை 9 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும். மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பகுதிகளில் இந்நீர்வெட்டு

Read Full Article
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக டெப் கருவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக டெப் கருவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி 0

🕔19:48, 25.ஜூன் 2019

தேசிய பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக டெப் கருவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு இலட்சம் டெப் கருவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Read Full Article
தெரிவு குழுவில் நாளைய தினம் இராணுவ தளபதி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் வாக்குமூலம்

தெரிவு குழுவில் நாளைய தினம் இராணுவ தளபதி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் வாக்குமூலம் 0

🕔18:26, 25.ஜூன் 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை பெற்று கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழு மீண்டும் நாளை கூடவுள்ளது. தெரிவு குழுவில் நாளைய தினம் வாக்குமூலமளிக்க இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read Full Article
வறட்சியான வானிலை :  நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

வறட்சியான வானிலை : நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு 0

🕔18:26, 25.ஜூன் 2019

சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறட்சியான வானிலை தொடருமானால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் குறைவடையும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 13 வீதமாகவும் மட்டக்களப்பிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 15 வீதமாகவும் மொனராகலை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 17 வீதமாகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த

Read Full Article
மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔18:22, 25.ஜூன் 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28 மற்றும் 29 ம் திகதிகளில் ஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ 20 மாநாட்டிற்கு இணைவாக சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இதற்கென நாளை மறுதினம் டொனால்ட் ட்ரம்ப் ஜப்பான் நோக்கி பயணிக்கவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி

Read Full Article
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றம் 0

🕔18:15, 25.ஜூன் 2019

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுள் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் து.று. தென்னகோன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில், கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள 150

Read Full Article
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் பலி

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் பலி 0

🕔16:33, 25.ஜூன் 2019

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இராணுவ கவச வாகனமொன்று புகையிரதத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் இராணுவ வாகனம் மோதியுள்ளது.

Read Full Article

Default