உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த பாடசாலை தவணையிலிருந்து டெப் கணணிகள்

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த பாடசாலை தவணையிலிருந்து டெப் கணணிகள் 0

🕔15:24, 28.ஜூன் 2019

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த பாடசாலை தவணையிலிருந்து டெப் கணணிகள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பாரிய செயற்திட்டமொன்றை தெற்காசியாவில் முன்னெடுத்த முதல் நாடு இலங்கையெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். கல்வி தகவல் தொழிநுட்ப யுகத்திற்குள் கொண்டு செல்லப்படும். கல்வித்துறையை நவீனமயப்படுத்த தவறினால் அது நாட்டிற்கு செய்யும்

Read Full Article
தமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பாகும் : ஜனாதிபதி

தமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பாகும் : ஜனாதிபதி 0

🕔15:22, 28.ஜூன் 2019

மாவட்டங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியது அனைத்து அமைச்சர்களதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்காது, தமக்காக ஒதுக்கப்படும் நிதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது அமைச்சர்களின் கடமையாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பிரதேச அரசியல் தலைவர்கள், துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து கிராமிய மக்களின் பிரச்சினைகளை கண்டறிவது அவசியமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பிரதேச செயலாளர்களும்,

Read Full Article
செல்பி மரணங்கள் உலகளாவிய பிரச்சினையாக மாற்றம்

செல்பி மரணங்கள் உலகளாவிய பிரச்சினையாக மாற்றம் 0

🕔15:11, 28.ஜூன் 2019

செல்பி புகைப்படம் எடுக்கும் போது இடம்பெறும் மரணங்கள் உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளதாக புதிய கணிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2011 ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து 2017 ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 259 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகளவான உயிரிழப்புக்கள் இந்தியாவிலேயே பதிவாகியுள்ளன. நவீன ரக செல்பி ஸ்டிக்களை பயன்படுத்தி செல்பி புகைப்படங்களை எடுக்கும் மோகம்

Read Full Article
அரச சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் : அமைச்சர் ரஞ்சித்

அரச சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் : அமைச்சர் ரஞ்சித் 0

🕔13:32, 28.ஜூன் 2019

அரச சேவை மறுசீரமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழிநுட்ப சேவைக்கு 492 அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரச சேவை என்பது நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரத்தின் முக்கிய துறையாகும். அரச ஊழியர்கள் செயற்திறன் மிக்கவர்களாக பணியாற்ற வேண்டும். குறிப்பாக அரச ஊழியர்கள்

Read Full Article
ஜீ 20 மாநாடு ஜப்பானில் ஆரம்பம்

ஜீ 20 மாநாடு ஜப்பானில் ஆரம்பம் 0

🕔13:30, 28.ஜூன் 2019

ஜீ 20 மாநாடு இன்று ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமாகிறது. நாடுகளுக்கிடையிலான வர்த்தக சமர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளன. இதேவேளை, ஜீ 20 மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னரே பல நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. சீன ஜனாதிபதி ஷி சின்பிங்கும், ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபேயும்

Read Full Article
ஓய்வு பெற்ற ரயில் ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் பணிகள் ஆரம்பம்

ஓய்வு பெற்ற ரயில் ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் பணிகள் ஆரம்பம் 0

🕔13:29, 28.ஜூன் 2019

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு இன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய ஓய்வு பெற்ற ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சமிஞ்சை மேற்பார்வையாளர்கள் மற்றும் ரயில் மார்க்க பரிசோதகர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது

பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது 0

🕔13:25, 28.ஜூன் 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதுர்தீன் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளார். ரிஷாத் பதுர்தீன் கடந்த 26ம் திகதி சாட்சியம் வழங்குவதற்காக தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜரான போதிலும் அவரிடம் விசாரணை நடத்தாமல்

Read Full Article
பொகோஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி

பொகோஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி 0

🕔13:17, 28.ஜூன் 2019

நைஜீரியாவின் பொகோஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலியாகியுள்ளனர். கிராமம் ஒன்றிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் பலி

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் பலி 0

🕔13:17, 28.ஜூன் 2019

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானமொன்று கட்டடமொன்றில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் விமானிகள் இருவரும் பலியானதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் பறக்க தொடங்கி சில நிமிடங்களில் எஞ்சின் இயந்திரம் செயலிழந்தது. இதனால் விமானத்தை விமானிகள் தரையிறக்கிய போது கட்டடத்தின் மீது மோதியுள்ளது. சம்பவத்தின்போது 43 பயணிகள் விமானத்தில்

Read Full Article
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு 0

🕔13:17, 28.ஜூன் 2019

பேசாலை – காட்டாஸ்பத்திரி கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவினை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினர் றோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சோதனைக்குட்பபடுத்தப்பட்டது. இதன் போது குறித்த படகிலிருந்து 9 பொதிகளில் 18 கிலோ 900 கிராம் நிறை கொண்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்பெறுமதி சுமார் 19

Read Full Article

Default