நத்தார் பண்டிகைக்கு முன்னர் சியோன் தேவாலய புனர் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்படும் : பிரதமர் வாக்குறுதி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2019 20:07

நத்தார் பண்டிகைக்கு முன்னர் சியோன் தேவாலய புனர் நிர்மாண பணிகள் நிறைவு செய்யப்படும் : பிரதமர் வாக்குறுதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் நத்தார் பண்டிகைக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டு, நத்தார் தேவ ஆராதனை நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு இன்று முற்பகல் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இடம்பெறும் தேவாலய புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் இப்புனரமைப்பு பணிகள் துரிதமாகவும் சிறப்பாகவும் இடம்பெறுவது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் பிரதமர் தனது பாராட்டினை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் பிரதமர் விசேட அவதானம் செலுத்தினார். சியோன் தேவாலயத்தின் போதகர் ரொஷான் மகேஷ் மனோஷன் தனது உரையில், பிரதமர் மற்றும் அரசாங்கம் வழங்கி வரும் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் தொடர்பாக தனது நன்றியை தெரிவித்தார். இத்துயர சம்பவம் நடந்த தினம் முதல் அது தொடர்பாக ஆராய்ந்து அனைத்து தேவாலயங்களையும் புனரமைப்பதற்காக பிரதமர் வழங்கி வரும் தலைமைத்துவம் அனைத்து மக்களினதும் மதிப்பை பெறறிருப்பதாகவும் அருட்தந்தை மேலும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மட்டக்களப்பில் உள்ள கத்தோலிக்க மற்றும் எங்லிக்கன் தேவாலயங்களுக்கு விஜயம் செய்த பிரதமர் அத்தேவாலயங்களுக்கு பொறுப்பான அருட்தந்தைமாருடன் கலந்துரையாடினார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2019 20:07

Default