மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை : கட்சி தலைவர்கள் தெரிவிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2019 19:42

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை : கட்சி தலைவர்கள் தெரிவிவிப்பு

தற்போது நிலவும் சட்ட வரையறைக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அமுலில் உள்ள வட்ட வரம்புக்குள் மாகாண சபை தேர்தலை நடத்தும் சாத்தியகூறுகள் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமானால் பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரியவும் கருத்து தெரிவித்திருந்தார்;. இவ்விடயம் தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். செப்டம்பர் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சி தலைவர்களுடன் இணக்கப்பாடு எதற்கும் வரவில்லையெனவும் அவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையெனவும் ஐரீஎன் செய்தி பிரிவு பிரதமரை கேட்ட போது அவர் தெரிவித்திருந்தார். செப்டம்பர் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சட்ட ரீதியான வாய்ப்பு இல்லையென எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் ஐரீஎன் செய்தி பிரிவிடம் குறிப்பிட்டிருந்தார். எந்தவொரு தேர்தலை எதிர்கொள்ளவும் எதிர்கட்சி தயார் எனவும் தேர்தல் சட்டமூலமொன்றே தேவையெனவும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பிரிவு தலைவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லையென மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2019 19:42

Default